[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் மஜத கட்சி தலைவர் குமாரசாமி சந்திப்பு
  • BREAKING-NEWS பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் ஜூலை 5ஆம் தேதி நேரில் ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் - அமித்ஷா
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஜூலை 4க்கு ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக மே 25ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஐ.ஜி.பொன்.மாணிக்கவேலுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்
  • BREAKING-NEWS அறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்துக் கொண்டு ஸ்டாலின் கற்பனையில் இருக்கிறார் : அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு

ரயில் விபத்தில் கால்களை இழந்த ரசிகருக்கு ரஜினி உதவி!

rajini-help-his-fan

ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு, ரஜினிகாந்த் மக்கள் மன்றம் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.

மதுரை திருநகரைச் சேர்ந்தவர் காசி விஸ்வநாதன் (33). சென்னையில் நடந்த ரஜினியின் ‘காலா’ படத்தின் பாடல் வெளியிட்டு விழாவில் பங்கேற்ப்பதற்க்காக சென்னைக்கு ரயிலில் வந்துள்ளார். விழாவை முடித்துவிட்டு சென்னையிலிருந்து மதுரைக்கு ரயிலில் பயணம் செய்த போது, செங்கல்பட்டு அருகே படிக்கட்டிலிருந்து தவறி விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து நடந்த இடத்திலேயே ஒரு கால் ரயில் சக்கரத்தில் மாட்டி துண்டிக்கப்பட்டுவிட்டது. உடனடியாக அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். 

இத்தகவல் ரஜினிகாந்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனையெடுத்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகரை தன் சார்பில் அனுப்பி வைத்தார்.  மருத்துவமையில் சிகிச்சை பெற்று வந்த விஸ்வநாதனை நேரில் சென்று சந்தித்த சுதாகர் மருத்துவரிடம் அவருடைய உடல் நலம் பற்றி கேட்டறிந்தார். அத்துடன், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நிதி உதவி வழங்கினார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close