[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

மே18 சன்னி லியோன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

the-first-look-of-sunny-leone-s-veeramadevi-to-be-out-on-may-18

சன்னி லியோனின் ‘வீரமாதேவி’ ஃபர்ஸ்ட்லுக் வரும் 18 தேதி வெளியாக உள்ளது

பிரபல நடிகை சன்னி லியோன் தமிழில் அறிமுகமாக உள்ள திரைப்படம் ‘வீரமாதேவி’. உலகம் முழுக்க இவருக்கு அதிக ரசிகர் உள்ளதால் அவரது அறிமுகம் குறித்து கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. இந்தப் படத்தை வடிவுடையான் இயக்கி வருகிறார். சன்னியின் பிறந்த நாளை கடந்த ஞாயிற்று கிழமை படக்குழு கொண்டாடியது. அதனையொட்டி படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது. சன்னியின் கண்களை மட்டும் காட்சிப்படுத்தும் அந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் அவரது ரசிகர்களால் பரப்பரப்பட்டு வந்தது. இதனை அடுத்து மே18 அன்று இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியாகும் என தெரிய வந்துள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் தயாராகி வருகிறது. இந்தப் படத்திற்காக சன்னி லியோன் மொத்தமாக 150 நாள்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

“நான் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிப்பதில் அதிகாக ஆர்வமாக இருக்கிறேன். இந்தப் படத்தின் திரைக்கதைக்காக நான் பல நாள்கள் காத்திருந்திருக்கிறேன். இந்தக் கதையை என்னிடம் இயக்குநர் வடிவுடையான் கூறியபோதே நான் தயாராகிவிட்டேன். தென்னிந்திய திரை ரசிகர்கள் மீது ஸ்பெஷலான அன்பு வைத்திருக்கிறேன். என்னென்றால் இங்கே எனக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்” என்று ஏற்கெனவே சன்னி லியோன் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close