[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் குறித்து நீதிபதி எஸ்.ஏ.பாப்டெ விசாரணை நடத்த உள்ளார் என தகவல்
  • BREAKING-NEWS இலங்கையில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு
  • BREAKING-NEWS மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் நகரில் உள்ள ராணி நகர் பகுதி வாக்குச்சாவடியில் வெடிகுண்டுவீசி தாக்குதல்
  • BREAKING-NEWS குண்டுகள் நிரப்பப்பட்ட சிறிய வேன், லாரி கொழும்பு நகருக்குள் நுழைந்திருப்பதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல்; கொழும்பு நகரில் தேடுதல் வேட்டை தீவிரம்
  • BREAKING-NEWS நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக இலங்கை தேவாலயங்கள் மீது தாக்குதல் - ஆரம்பகட்ட விசாரணையில் தாக்குதலுக்கான காரணம் தெரிந்ததாக இலங்கை பாதுகாப்பு துணை அமைச்சர் தகவல்

ரூ.2.6 கோடி மதிப்புள்ள ’அயன்மேன்’ டிரெஸ் மாயம்: போலீஸ் அதிர்ச்சி!

the-original-iron-man-suit-has-stolen

’அயன் மேன்’ படத்துக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு உடை, மாயமானது ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சூப்பர் ஹீரோ படங்களில் அதிக வரவேற்பை பெற்ற ஹாலிவுட் படம், ’அயன் மேன்’. மார்வல் காமிக்ஸின் அடிப்படையில் உருவான இந்தப் படத்தை மார்வல் ஸ்டூடியோஸ் தயாரித்தது. 2008-ல் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றதுடன் வசூலிலும் மிரட்டியது. ஜோன் பேவ்ரியூ இயக்கிய இந்தப் படத்தில் ராபர்ட் டோவ்னி ஜூனியர் அயன்மேனாக நடித்திருந்தார். படத்தில் அவர் அணிந்திருந்த அயன்மேன் உடை பேசப்பட்ட ஒன்று. சிறுவர்களை கவர்ந்த உடையாகவும் இது இருந்தது. 

முதல் பாகத்தை அடுத்து இந்தப் படத்தின் அடுத்த இரண்டு பாகங்கள் வெளியாயின.  இந்நிலையில் முதல் பாகத்தில் ’அயன்மேன்’ அணிந்திருந் த உடை, அமெரிக்காவின் திரைப்படங்களுக்கான பொருட்களை பாதுகாக்கும் மையத்தில் வைக்கப்ப்பட்டிருந்தது. இந்த உடையை இப்போது காணவில்லை. அந்த உடையின் இந்திய மதிப்பு, ரூ. 2.6 கோடி ரூபாய்!

பிப்ரவரி மாதத்தில் இருந்து ஏப்ரல் 25-ம் தேதிக்குள் இந்த உடை கொள்ளையடிக்கப் பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுபற்றி வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரித்து வருகின்றனர். இது ஹாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close