[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

அஜித் விசுவாசத்திற்காக கையை அறுத்துக் கொண்ட ரசிகர்

ajith-fan-cut-his-hand-for-vishuvasam

அஜித் விசுவாசத்திற்காக கையை அறுத்துக் கொண்ட ரசிகர் ஒருவரின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

தனது ரசிகர் மன்றங்களை எப்போதோ கலைத்துவிட்டார் அஜித். ஆனால் அவர் கலைத்த பின்புதான் அவரது ரசிகர்கள் பட்டாளத்தின் எண்ணிக்கை அதிகரித்தது. அது ஒரு மேஜிக் என அவரது ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். அவர் ரசிகர்களை சந்திப்பதில்லை. விழாக்களில் கலந்து கொள்வதில்லை. தான் உண்டு; தன் வேலை உண்டு என போகிறது அஜித் வாழ்க்கை. அந்தப் பாதையை விட்டு அவர் விலக்குவதாக இல்லை. ஆனால் அவரை பற்றி ஏதாவது நெகடிவ் செய்திகள் தலைத்தூக்கினால் ‘தல’ ரசிகர்கள் தாறுமாறாக களத்தில் குத்து விடுகின்றனர்.

சமீபத்தில் கூட காவிரி வேண்டி நடந்த திரை உலகினர் போராட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என்பதால் விமர்சனங்கள் எழுந்தன. ‘தமிழுணர்வு அஜித்திற்கு இல்லையா?’ என கேள்வி முன் வைக்கப்பட்டது. அதனையொட்டி அவரது ரசிகர் ஒருவர் பேசிய வீடியோ பதிவில் “தல திருவான்மியூர் விட்டு வாசல்ல வந்து நின்னாருனா ரோகினி தியேட்டர் மேல காவிரி ஓடும்” என பேசி இருந்தார். அதை வைத்து ட்விட்டரில் ‘ரோகினி மேல காவிரி’  ட்ரெண்ட் ஆனது. 

இந்நிலையில் அவரது ரசிகர் ஒருவர் தனது கைகளை ப்ளேட் மூலம் கீறி வெளியேறும் ரத்தத்தை கொண்டு அவர் ஒரு காகிதத்தில் ‘விசுவாசம்’ என எழுதி வைத்துள்ளார். அதைக் கண்ட பலர் அவரது இந்தச் செய்கையை விமர்சித்து வருகின்றனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close