[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

அஜித்தின் ‘விசுவாசம்’ மே மாதம் படப்பிடிப்பு

ajith-s-viswasam-most-likely-to-go-on-the-floors-from-may-4

‘விசுவாசம்’படத்தில் அஜித் நடிக்க உள்ள ஸ்பெஷல் கெட் அப் வெளியாகி உள்ளது. 

இயக்குநர் சிவா நான்காவது முறையாக அஜித்துடன் இணைய உள்ள திரைப்படம்‘விசுவாசம்’. இதன் படப்பிடிப்பு கடந்த மாதமே தொடங்குவதாக இருந்தது. ஆனால் திரை உலக வேலை நிறுத்தத்தால் படப்பிடிப்புகள் தடைப்பட்டன. இப்போது திரை உலகப் பிரச்னைகள் சுமூகமாகியுள்ள நிலையில் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்நிலையில் அஜித் நடிக்க உள்ள ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் சூடுப்பிடிக்கத் தொடங்கியுள்ளன. ஆகவே அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 

இந்நிலையில் அஜித்தின் புதிய தோற்றம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் வழக்கம் போல் அஜித் பெப்பர் அண்ட் சால்ட் கெட் அப்பில் இல்லை. கருகருவென்று கறுப்புத் தலையோடு காட்சி அளிக்கிறார். தலைக்கருத்த அஜித்தை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன. பெப்பர் அண்ட் சால்ட் என்பதே அவரது அஃமார்க் ஸ்டைல் ஆகிவிட்டது. ஆனால் அதை பற்றி கவலைப்படாமல் அஜித் பழைய தோற்றத்திற்கு திரும்பியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் 4ம் தேதி தொடங்க உள்ளதாக தெரிகிறது. அதே மே மாதம் 1ம் தேதி அஜித்திற்கு பிறந்தநாள் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close