[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

கர்நாடக காவியின் தூதுவர் ரஜினி - பாரதிராஜா கடும் தாக்கு

bharathiraja-warned-rajinikanth-for-his-comment-on-ipl-protest

அறவழியில் போராடிய தமிழர்கள் வன்முறையாளர்களா? என்று ரஜினிக்கு இயக்குநர் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். 

ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக ஏப்ரல் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, காவலர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல், சென்னை அணி ரசிகர்கள் சிலர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து ரஜினி தனது ட்விட்டரில், “வன்முறையின் உச்சக்கட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்” என்று கருத்து பதிவிட்டிருந்தார். காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ காட்சிகளையும் பதிவிட்டு இருந்தார். 

ரஜினிகாந்தின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், ரஜினியின் கருத்து இயக்குநர் பாரதிராஜாவும் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். “பேசும் போது, எதைப்பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேசுங்கள். இல்லையென்றால், தமிழ் மக்களால் நீங்கள் ஓரங்கட்டப்படுவீர்கள்” என்று ரஜினிக்கு பாரதிராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், “கலைஞர்களெல்லாம் ஒன்றுக் கூடி, எதிர்க்குரல் கொடுத்த போதும், அங்குள்ள காவலர்கள் தமிழர்களைத் துரத்தித் துரத்தி அடித்த போதும், தமிழ்நாடு பதிவு எண் கொண்ட அத்தனை வாகனங்களையும் அடித்து நொறுக்கிய போதும், வாகன ஓட்டிகளை நிர்வாணப்படுத்தி அடித்தப் போதும் வாய்திறக்காத நீங்கள் இன்று, தமிழ்நாட்டிலேயே இருந்து கொண்டு, தமிழனிடம் உறிஞ்சிய ரத்தத்தில், ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டு, எங்களையே வன்முறையாளர்கள் என்று பட்டம் சுமத்துகிறீர்கள். சீருடையில் இருந்தவரும் எங்கள் தமிழன் தான், எங்கோ, கூட்டத்தில் அடையாளம் இல்லாத ஒருவன், அல்லது இந்த நிகழ்ச்சியைக் கறைபடுத்த நினைத்த ஒருவர், செய்த செயலுக்கு நாங்கள் வருந்துகிறோம். நடந்த போராட்டம் தனிமனிதர்களுக்கானது அல்ல” என்று அவர் கூறியுள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close