[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்

சமந்தாவின் அர்ப்பணிப்பு: புகழ்ந்து தள்ளிய தெலுங்கு பிரபலங்கள்!

telugu-film-personalities-praised-samantha-s-commitment

நடிகை சமந்தா தெலுங்கில் ராம் சரண் தேஜாவுடன் நடித்த படம், ’ரங்கஸ்தலம்’. ஆதி, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர். சுகுமார் இயக்கி இருந்த இந்தப் படம், அங்கு ஹிட்டானது. ’பாகுபலி’க்குப் பிறகு தெலுங்கில் அதிக வசூல் ஈட்டிய படம் இது என்கிறார்கள். இந்தப் படம் தமிழ், மலையாளம், இந்தி, போஜ்புரி மொழிகளில் டப் செய்து வெளியிடப்படுகிறது.

இந்தப் படத்தின் வெற்றி விழா ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் பேசியவர்கள் படத்தைப் பற்றியும் ராம் சரணின் நடிப்பைப் பற்றியும் புகழ்ந்து பேசினர். பின்னர் நடிகை சமந்தாவின் அர்ப்பணிப்பையும் புகழ்ந்து தள்ளினர். அவரது டெடிகேஷனையும் உறுதியையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்றனர். 

இதையடுத்து சமந்தா பேசும்போது, ‘படத்தை வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கு நன்றி. படத்துக்காக அனைவரும் கடுமை யான உழைப்பை வழங்கினோம். இந்தப் படத்தில் ராமலட்சுமி என்ற கேரக்டரில் நடித்தேன். அந்த கேரக்டரை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். ராம் சரண் சிறந்த நடிகர். அவருடன் நடித்ததில் மகிழ்ச்சி’ என்றார். 

இந்த விழாவுக்கு வித்தியாசமான கெட்டப்பில் சமந்தா வந்தார். தனது தலைமுடியை ஸ்டைலாக குறைத்து வெட்டியி ருந்தார். இது அவர் நடிக்கும் ’யு டர்ன்’ பட ரீமேக்கிற்கான கெட்டப் என்று கூறப்படுகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கில் உருவாகிறது. பவன் குமார் இயக்கும் இந்தப் படத்தில் ஆதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சமந்தா பத்திரிகையாளராக நடிக்கிறார். பூமிகா, நரேன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோ கேலரி:


 

போட்டோ கேலரி

1 of 10

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close