[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS அஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.
  • BREAKING-NEWS நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்
  • BREAKING-NEWS மதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு
  • BREAKING-NEWS ஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்? - தம்பிதுரை எம்.பி.

ஐபிஎல் கருப்பு சட்டை.. அப்துல்கலாம் ஆன்மா.. உணர்ச்சிவசப்பட்ட சிம்பு!

actor-simbu-emotionally-speech-about-cauvery-management-board-and-sterlite-protest

போராட்டத்திற்கு நடிகர் சங்கம் தன்னை அழைக்கவில்லை என நடிகர் சிம்பு குறை கூறியுள்ளார். 

நடிகர் சங்கப் போராட்டத்தில் தான் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து, சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் நடிகர் சிம்பு செய்தியாளர்களிடம் கூறினார். அப்போது, “சினிமா துறையில் உள்ள பிரச்னைகளை தீர்க்கவே சினிமா துறை திண்டாடி வருகிறது
. நடிகர் சங்க மவுன போராட்டத்தில் எனக்கு உடன்பாடில்லை. பேசாமல் இருந்ததால்தான் இந்த பிரச்னையே வந்தது. போராட்டத்திற்கு நடிகர் சங்கம் என்னை அழைக்கவில்லை. யார் எதற்காக பேசுகிறார்கள் என்பதை மக்கள் உணர வேண்டும். ஜெயலலிதா மறைவு முதல் தமிழகத்தில் சூனியம் வைத்தது போல் பிரச்னைகள் தலைவிரித்தாடுகிறது” என்றார். 

அத்துடன், “ஐபிஎல் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்பது நியாயமான ஒன்றுதான். ஐபிஎல் போட்டியை பார்க்காதீர்கள் என்று கூறினால் யாரும் கேட்கப்போவதில்லை. நான் சொல்வது என்னவென்றால், ஐபிஎல் போட்டி நடக்கும் ஸ்டேடியத்திற்குள் எங்களை அனுமதியுங்கள். அதுபோதும். நான் சொல்ல வருவது என்னவென்று புரிந்திருக்கும். நான் பிரச்னை செய்யப்போவதாக கூறவில்லை” என்று கூறினார். 

மேலும், “தமிழகம் மகிழ்ச்சியில் உள்ளது. எங்களுக்கு போர் (நேரம் போகவில்லை) அடிக்கிறது. அதனால் தான் ஐபிஎல் போட்டிக்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்கிறோம். அனுமதித்து பாருங்கள் நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை. ஐ.பி.எல் போட்டி நடந்தால் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என அப்துல்கலாம் ஆன்மா கூறியது” என்று உணர்ச்சிவசமாக பேசினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close