[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி

நடிகையின் அரை நிர்வாண போராட்டத்தால் பரபரப்பு

tollywood-actress-protest

மேலாடையின்றி போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தெலுங்கு பட உலகில் நடிகைகளுக்கு ஏகப்பட்ட பாலியல் தொந்தரவு இருப்பதாகவும், பட வாய்பிற்காக நடிகைகள் படுக்கை அறைக்கு அழைக்கப்படுவதாகவும் பல்வேறு புகார்கள் தெரிவித்து நடிகை ஸ்ரீ ரெட்டி மேலாடையின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தெலுங்கு திரைப்படம் வர்த்தக சபை முன் போராட்டத்தில் ஈடுபட்ட அவர், இதுகுறித்து புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை என கூறினார்.

இதுதொடர்பாக மீடியாக்களிடம் பேசிய அவர், “பாலியல் தொடர்பான புகார் தெரிவித்தால் என்னைத் தான் தவறாக நினைக்கிறார்கள். என்னிடம் சிலர் தவறாக நடந்து கொண்டதற்கான ஆதாராம் உள்ளது. நான் மற்றவர்கள் பற்றி பேச விரும்பவில்லை. ஆனால் எனக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஆதாரமும் என்னிடம் உள்ளது” என்றார். மேலாடையின்றி நடிகை ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு வந்த போலீசார் வலுக்கட்டாயமாக ஸ்ரீ ரெட்டியை வெளியேற்றினார். பின்னர் ஸ்ரீ ரெட்டியை  கைது செய்து போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தயாரிப்பாளர்கள் மீது தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வரும் ஸ்ரீ ரெட்டி, அந்தத் தயாரிப்பாளரின் பெயரை வெளியிடவில்லை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close