நடிகர் ரஜினிகாந்த ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், ஆலை விரிவாக்கத்தை தடை செய்ய கோரியும் பலரும் பல வழிகளில் போராடி வருகின்றனர். மேலும் இந்த ஆலையின் விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரெட்டியாபுரம் கிராம மக்கள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது என்றும், மண்ணுக்கும், மக்களுக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் தொடர்ந்து ஆபத்து நீடிக்குமேயானால், அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இதுதவிர வைகோ, தொல்.திருமாவளவன், வைகோ உள்ளிட்ட பல தலைவர்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று ஸ்டெர்லைட் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்திட்டுள்ளார். அதில், “ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களாக அவதிப்பட்டு போராடிக் கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !