[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

ரஹ்மான் இசையில் முதல் பாடலை பாடப்போகும் விஜய்

vijay-singing-a-new-song-in-rahman-music

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர் விஜய் ஒரு பாடலை பாட உள்ளார்.

நடிகர் விஜய் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய நாளில் இருந்தே வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் பின்னணி பாடகராக தனது குரலை பதிவு செய்து வருகிறார். ‘தொட்டப்பேட்டா ரோட்டுமேல முட்ட பரோட்டா’ என குத்துப்பாடலில் தொடங்கி ‘கண்டாகிக் கண்டாகி கட்டி வந்த பொண்ணு’ வரை கலக்கல் காம்போவில் அவரது குரல் ஒலித்து கொண்டே இருந்தது. அவரது பாடல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதை அறிந்தும் விஜய் சில வருடங்களாக திரையில் பாடுவதை நிறுத்தினார். பிறகு என்ன நிலைத்தாரோ மீண்டும் தனது அடுத்த இன்னிங்ஸ்சை தொடங்கினார். ‘வாங்கண்ணா வணக்கம்ங்கண்ணா’ வில் தொடங்கி ‘செல்ஃபி புள்ள’ வரை அவர் தொட்டப் பாடல்கள் எல்லாம் ஹிட் அடித்தது.

இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்திற்காக விஜய் ஒரு பாடலை பாடிக் கொடுக்க இருக்கிறார். அவரது பாடல்களுக்கு என தனி மார்க்கெட் இருப்பதால் ‘அவசியம் ஒரு பாடலை பாடித்தர வேண்டும்’ என படக்குழு கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. ரஹ்மான் இசையில் விஜய் பாடப்போகும் முதல் பாடல் என்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close