[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

200 படங்களுக்கு மேல் பணிபுரிந்த பிரபல எடிட்டர் காலமானார்!

legendary-editor-sekar-passed-away-at-81

பிரபல சினிமா எடிட்டர் சேகர் காலமானார். அவருக்கு வயது 81.

தமிழில், ’வருஷம் 16’ ,  இந்தியாவின் முதல் 3டி படமான 'மை டியர் குட்டிச்சாத்தான்' உட்பட ஏராளமான படங்களுக்கு எடிட்டராக பணியற்றியவர் சேகர். இயக்குனர்கள் பாசில், சித்திக் போன்ற முன்னணி இயக்குநர்களின் படங்களுக்கு ஆஸ்தான எடிட்டராக பணியாற்றிய இவர், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழிகளில் 200 படங்களுக்கு மேல் எடிட்டராக பணியாற்றியுள்ளார். தமிழில் கடைசியாக ’சாது மிரண்டால்’ படத்துக்கு எடிட்டிங் செய்தார்.  பிறகு திருச்சி அருகே உள்ள ஊரான தென்னூரில் செட்டிலாகிவிட்டார். 

இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். மறைந்த சேகருக்கு மனைவி சுந்தரி, மகள்கள் தீபலட்சுமி, திலகவதி, நித்யா ஆகியோர் உள்ளனர். இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்கிறது. அவரது மறைவுக்கு திரைப்பட துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close