[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

'சபாஷ் நாயுடு'-வாகும் தசாவதாரம் பல்ராம் நாயுடு

kamal-hassan-s-tri-lingual-sabash-naidu-launched

கமல் ஹாசன், இளையராஜா கூட்டணியில் உருவாகிவரும் மும்மொழி படத்துக்கு சபாஷ் நாயுடு என்று பெயரிடப்பட்டுள்ளது. 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இளையராஜாவுடன் கமல் ஹாசன் இணையும் படத்துக்கான அறிமுக விழா சென்னை வடபழனியில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இன்று நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்த படத்துக்கு கதை, திரைக்கதையை கமல் எழுத, ராஜீவ்குமார் இயக்குகிறார். 

தசாவதாரம் படத்தில் வரும் உளவுத்துறை அதிகாரி பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள இந்த கதை காமெடி சரவெடிகளுடன் தயாராகும் என்று தெரிகிறது. இந்த படத்தில் கமல் ஹசனின் மகள் ஸ்ருதி ஹாசன் அவருக்கு மகளாவே நடிக்கிறார், அதேபோல ரம்யா கிருஷ்ணனும் நடிக்கிறார். 

தமிழ், தெலுங்கு மொழிகளில் கமலுடன் இணைந்து நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் நடிக்கிறார். இன்று நடந்த விழாவில் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close