[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

அரியலூர் அனிதாவாக, பிக்பாஸ் ஜூலி !

bigboss-julie-to-act-in-biopic-of-ariyalur-anitha

நீட் தேர்வின் காரணமாக எம்.பி.பி.எஸ். சேறுவதற்கான இடம் கிடைக்காமல் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி தற்கொலை செய்துக்கொண்டவர் அரியலூர் மாணவி அனிதா. அனிதாவின் தற்கொலை நாடு முழுவதும் பேசப்பட்டதுடன், பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மேலும், பல்வேறு அரசியல் கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிராக போராடுவதற்கான விதையை தூவியவர் அரியலூர் அனிதா. அப்படிப்பட்ட அனிதாவின் பிறந்தநாள் இன்று. எனவே, இந்தப் பரபரப்பான விஷயத்தை கையில் எடுத்த தமிழ்த் திரையுலகம், அனிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கவுள்ளதாக அறிவித்து இன்று அனிதா எம்.பி.பி.எஸ் என்ற தலைப்பிலான படத்தின் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளது.
இதில் அனிதாவின் கதாப்பாத்திரத்தில் பிக்பாஸ் புகழ் மரியா ஜூலியானா நடிக்கிறார். ஜூலி தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். அதுதவிர சில விளம்பரப் படங்களில் நடித்திருக்கும் ஜூலி, 'உத்தமி' என டைட்டில் வைக்கப்பட்ட படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில், ஜூலியின் அடுத்த பட அறிவிப்பு இன்று வெளியாகியது. இப்படம் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறைந்த அரியலூர் மாணவி அனிதாவின் வாழ்க்கைக் கதையில் உருவாகிறது. இந்தப் படத்தை கே7 என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது, போராளி அனிதா கதாப்பாத்திரத்தில் ஜூலி நடிப்பதா என்ற கண்டனக் குரலும் எழுகிறது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close