[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

‘சே’ கெட் அப்பில் நடிகர் சூர்யா

first-look-of-suriya-36-released

‘சூர்யா36’படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்கு தலைப்பு இன்னும் வைக்கபடாத நிலையில் 
‘சூர்யா36’ என சுறுக்கமாக வைக்கப்பட்டு இருந்தது. இந்தப் படத்திற்கான செட் ஒன்று 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்காக ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதனை முறையாக தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யா வெளியிட்டுள்ளார். அதில் ‘சேகுவேரா’வின் கெட் அப்பில் சூர்யா உள்ளார். மேலும் என்.ஜி.கே. என ஹேஸ்டேக் போடப்பட்டுள்ளது. ஆகவே அதுவே இப்படத்தின் தலைப்புக்கான சுறுக்கமாக இருக்கும் என்ற பேச்சும் நிலவுகிறது. 

இன்று இயக்குநர் செல்வராகவனின் பிறந்தநாள். ஆகவே அவரது பிறந்தநாள் பரிசாக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி போன்ற நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இதில் ஜெகபதி பாபு வில்லனாக நடித்து வருகிறார். இப்படம் 2018 தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close