[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்

மக்கள் வெள்ளத்தில் ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் !

sridevi-funeral-family-members-bollywood-stars-fans-joins-procession

ஸ்ரீதேவியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகின்றது.

துபாயில் உயிரிழந்த ஸ்ரீதேவியின் உடல் பதப்படுத்தப்பட்டு தனிவிமானம் மூலம் நேற்றிரவு சுமார் 9.30 மணியளவில் மும்பைக்கு கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச்செல்லப்பட்ட அவரது உடல், மும்பை க்ரின் ஏக்கர்ஸ் இல்லத்தில் வைக்கப்பட்டது. இதையறிந்த அவரது ரசிகர்கள் ஏராளமானோர், இறுதியஞ்சலி செலுத்த அங்கு திரண்டனர்.

 ஸ்ரீதேவியின் உடல் போனி கபூருக்குச் சொந்தமான செலிபிரேஷன் கிளப் வளாகத்தில் காலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொது மக்கள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரை அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து 3 நாட்களாக அவரது இல்லத்தின் முன் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.  அதேபோல், பாலிவுட் நடிகர், நடிகைகள் மற்றும் விஐபிக்களும் அஞ்சலி செலுத்தினர்.

 ஸ்ரீதேவியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் மதியம் 3 மணியளவில் செலப்ரேசன் ஸ்போர்ட்ஸ் கிளப்பிலிருந்து இறுதி ஊர்வலம் தொடங்கியது. பவன் ஹன்ஸ் பகுதி வரை இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது. கபூர் குடும்ப வழக்கத்தின்படி சேலை, பாரம்பரிய தங்க ஆபரணங்கள் மாலை அலங்காரத்துடன் ஸ்ரீதேவியின் பூத உடலை தாங்கி செல்லும் வாகனத்தை காண சாலையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்து கிடந்தனர். பிற்பகல் 4.30 மணியளவில் வைல் பார்லே சேவா சமாஜ் தகன மையத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close