[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

‘சீமராஜா’விற்காக ஷ்ரேயா கோஷல் பாடிய மெலோடி பாடல்

shreya-ghoshal-sings-new-song-for-seema-raja

‘சீமராஜா’ படத்திற்காக பாடகி ஷ்ரேயா கோஷல் ஒரு மெலோடி பாடல் பாடியுள்ளார்.

சிவாகார்திகேயனின் அடுத்த திரைப்படம் ‘சீமராஜா’. இதனை பொன்ராம் இயக்கி வருகிறார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு இந்தக் கூட்டணி இணைந்துள்ளதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. புதிய படத்திற்கான தலைப்பை சமீபத்தில்தான் படக்குழு அறிவித்தது. 

இமானின் இசையில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’  ‘பாக்காத பாக்காத’ வெளியான மெலோடி பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பட்டித் தொட்டி எங்கும் எதிரொலித்தது. அதேபோல், ‘ரஜினி முருகன்’ படத்திலும் ‘உன்மேல ஒரு கண்ணு’ பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் ‘சீமராஜா’ விற்காக ஸ்ரேயா கோஷல் ஒரு மெலோடி பாடலை பாடியுள்ளார். 

இசையமைப்பாளர் இமான் ஸ்டியோவில் அவர் எடுத்து கொண்ட செல்ஃபி புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இதனை இமான் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில் “தம்பி சிவகார்த்திகேனுக்காக ‘பாக்காத பாக்காத’ பாடல் மற்றும் ‘உன்மேல ஒரு கண்ணு’க்கு பிறகு ‘சீமராஜா’விற்காக ஆத்மார்த்தமான ஒரு மெலோடி தர உள்ளோம். அதற்கான இடத்தை ஏற்படுத்தி தந்த இயக்குநருக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். 


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close