[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்
  • BREAKING-NEWS மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா
  • BREAKING-NEWS எனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

ஒரே நாளில் இவ்ளோ புகழ்: என்ன சொல்கிறார் பிரியா பிரகாஷ்?

priya-prakash-varrier-says-i-believe-in-true-love

ஒரே பாடல் மூலம், ஒரே நாளில் உலகப் புகழ் பெற்றிருக்கிற பிரியா பிரகாஷ், இதை எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

மலையாளத்தில் 'ஒரு அதார் லவ்’ படத்தில் இடம்பெற்றுள்ள 'மாணிக்க மலராயா பூவி' என்ற பாடல், கடந்த 9-ம் தேதி வெளியிடப்பட்டது. இதை இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். சில காட்சிகளே இதில் வந்தாலும் அழகான இமை அசைப்பினால் அனைவரையும் ஈர்த்திருக்கிறார் பிரியா பிரகாஷ் வாரியர்.

ஒரே நாளில் இவர் ட்விட்டர் பக்கத்தை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை சுமார் ஐம்பதாயிரத்தை கடந்திருக்கிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 2 மில்லியனைத் தாண்டியிருக்கிறது. 

திருச்சூர், விமலா கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்துவரும் பிரியா, தனக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்து கூறும்போது, ‘ஒரே நாளில் இப்படி பிரபலமாவேன் என நினைத்துப் பார்க்கவில்லை. இந்த பாடல் வெளியான பின் கல்லூரிக்குச் சென்றேன். எனது பேராசிரியர்களும் நண்பர்களும் என்னை விட அதிக சந்தோஷத்தில் இருந்தார்கள். தாங்கள் அதிகம் பெருமைப்படுவதாகச் சொன்னார்கள். நான் அகமகிழ்ந்து போனேன். 

காதலை பற்றி என்னிடம் கேட்கிறார்கள். அந்த பாடலில், பள்ளிப் பருவ ஈர்ப்பைச் சொல்லியிருக்கிறோம். அந்தக் காட்சியில் வரும் கண்களின் பேச்சும் நளினமும் இனிமையானது. இந்த நவீன காலத்திலும், காதல் ஒரு மாய உணர்வாகத்தான் இருக்கிறது. அதை யாரும் தவிர்க்க முடியாது. உண்மையான காதலை நான் நம்புகிறேன். ஒவ்வொரு தலைமுறையிலும் அது இருக்கும்’ என்கிறார் பிரியா.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close