[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

மோசமாக நடந்துகொண்டார்: சாய் பல்லவி மீது தெலுங்கு ஹீரோ பரபரப்பு புகார்!

actress-sai-pallavi-has-an-unruly-behaviour-on-sets-says-her-co-star

படப்பிடிப்பில் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாக நடிகை சாய் பல்லவி மீது, தெலுங்கு ஹீரோ பரபரப்பு புகாரைக் கூறியுள்ளார்.

மலையாளத்தில் வெளியான ’பிரேமம்’ மூலம் அறியப்பட்டவர் நடிகை சாய் பல்லவி. இதில் அவரது மலர் டீச்சர் கேரக்டர், ரசிகர்களுக்கு பிரபலம். இதையடுத்து தெலுங்கில் சேகர் காமுலா இயக்கிய ’ஃபிடா’ என்ற படத்தில் நடித்தார். இந்தப் படமும் ஹிட். இந்நிலையில் தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள ’கரு’ படத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி. இதில் ஹீரோவாக, இளம் தெலுங்கு நடிகர்  நாக சவுரியா நடித்துள்ளார்.

அவர் சாய் பல்லவி பற்றி கூறும்போது, ‘அவரைபற்றி பேச விரும்பவில்லை. படப்பிடிப்பில் அவர் நடந்துகொண்ட விதம், சகிக்க முடியாததாக இருந்தது. சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கோபப்பட்டு முரட்டுத்தனமாக நடந்துகொண்டார். ’ஃபிடா’ படம் தெலுங்கில் ஹிட்டாகி இருந்தாலும் அதற்கு சாய்பல்லவி காரணமல்ல’ என்றார். ஹீரோ ஒருவரின் இந்தப் புகார் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே, நானியுடன் சாய் பல்லவி நடித்த ’மிடில் கிளாஸ் அப்பாயி’ பட ஷூட்டிங்கிலும் இதே போல பிரச்னை ஏற்பட்டதாகக்  கூறப்பட்டிருந்தது. படப்பிடிப்பில் நானிக்கும் பல்லவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருவருமே படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறிய சம்பவம் நடந்தது. இந்நிலையில் நாக சவுரியா கூறியுள்ள இந்தக் குற்றச்சாட்டு தமிழ், தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாய் பல்லவி, தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திலும் தனுஷின் மாரி 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close