[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

அமலாபாலை பாராட்டிய விஷால்! 

vishal-wishes-to-amala-paul

நடிகை அமலாபால் தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து தைரியமாக புகார் அளித்ததற்காக நடிகர் விஷால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்தின் சார்பில் விஷால் வெயிட்டுள்ள அறிக்கையில், சமீபத்தில் பிரபல நடிகை அமலாபால் தனக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார். மேலும் காவல்துறையிடம் புகாரும் அளித்தார். இதனைத்தொடர்ந்து சென்னை மாம்பலம் ஆர்1 காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் நேரடியாக விசாரித்து அந்த நபரை கைது செய்தனர். காவல்துறையின் விரைவான நடவடிக்கைக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்த விஷால், பல நடிகைகள் தங்களுக்கு நேரும் பாலியல் தொல்லை பற்றி வெளியில் சொல்ல பயந்தாலும் நடிகை அமலாபால் தைரியமாக புகார் செய்ததற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது என்றும் நடிகர் விஷால் குறிப்பிட்டுள்ளார்.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close