[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.14 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்

நடிகர் விஜய்க்கு கவிதை பாடிய பார்த்திபன்

actor-parthiban-write-vijay-poetry-on-twitter-page

நடிகர் விஜய்யை புகழ்ந்து தனது ட்விட்டரில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் கவிதை படித்திருக்கிறார்.

சந்தர்ப்பம் கிடைக்கும் மேடைகளில் எல்லாம் இயக்குநர் பார்த்திபன் ஹைக்கூ கவிதைகளை பாடுவது வழக்கம். இவர் சமீபத்தில் நடிகர் விஜய்யை அவரது தாயாருடன் சந்தித்துள்ளார். அதற்கான செல்ஃபி புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் நடிகர் விஜய்யை ஓவியமாக கீர்த்தி சுரேஷ் வரைந்து தந்த படமும் இடம் பெற்றுள்ளது. மேலும் பார்த்திபன் கவிதை ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், 

”உயரம் எப்படி ஆழத்தில்?

அலைகள் கடந்த கடலின் ஆழத்தில்..!
அமைதியாய்...அந்த உயர் நட்சத்திரம். 
சிரிப்பில் கூட இதயம் விஜயம்!

மகனின் பெருமை பூரிப்பாக,
ஆத்ம த்ருப்தி இசையாக-அவர் தாய்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close