[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

அரசியல் பணிகளில் உழைக்க வாய்ப்பு கொடுங்கள்: உதயநிதி ஸ்டாலின்

udhayanidhi-stalin-on-his-political-entry

அரசியல் பணிகளில் உழைக்க வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கிறேன் என நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்த்திரைப்படங்களில் நடித்து வரும் உதயநிதி ஸ்டாலின், தான் அரசியலுக்க வருவதற்கான நேரம் வந்துவிட்டதாக கூறியுள்ளார். திமுக போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் தேர்தலில் போட்டியிடத் தயார் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் தனது அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது, “அரசியல் பார்த்துதான் வளர்ந்தேன். சினிமாவிற்கு வந்ததால் ஒதுங்கி இருந்தேன். எனக்கும் கொஞ்சம் ஆர்வம் இருக்கிறது அதனால் அரசியல் பேசினேன். 
கலைஞர் பேரன் செயல் தலைவர் மகன் என்ற தகுதி போதாது.. நான் அரசியல் பணிகளில் உழைக்க வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கிறேன்.

கட்சி வேலை முதலில் செய்கிறேன் வாய்ப்பு கொடுங்கள். ரஜினி கமல் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. அவர்கள் கொள்கைகளை அறிவிக்கட்டும் அதை பற்றி பேசுவோ. தி.மு.க கழகம் சரியான பாதையில் பயணித்துக்கொண்டு இருக்கிறது.. புதியவர்களை பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

ஆர்.கே நகர் தேர்தல் தோல்விக்கு காசு பணம் விளையாண்டுள்ளது தான் காரணம். தமிழ் நாட்டில் நடப்பது அ.தி.மு.க ஆட்சியே கிடையாது. கவர்னர் ஆட்சிதான் நடக்கிறது. அதுவும் சிறப்பாக இல்லை. மு.க அழகிரி கட்சியில் இல்லை. கட்சியில் இல்லாதவரை பற்றி பேச தேவையில்லை. தேர்தல் அரசியலில் நிற்க மாட்டேன் என்று உறுதியாக சொல்ல முடியாது” என்று கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close