[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு

பாடகரும், நடிகருமான சிலோன் மனோகர் காலமானார்

singer-actor-ceylon-manohar-passed-away

பிரபல தமிழ் பாப் பாடகரும், நடிகருமான சிலோன் மனோகர் (வயது 73) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். 

இலங்கையின் பிரபல பாப் இசை பாடகர் சிலோன் மனோகர்.1960களில் பெயிலா என்று அழைக்கப்பட்ட இலங்கை நாட்டுப்புறப்பாடல்களை, பாப் இசையோடு கலந்து புதிய இசை வடிவத்தை உருவாக்கியவர் இவர். இலங்கையில் பிறந்த அவர், சுராங்கனி என்கிற தமிழ் பாப் பாடலை பாடியதன் மூலம் உலகமெங்கும் பிரபலமானார். பின்னர் சென்னை வந்த மனோகர், சினிமாவில் நடிக்க தொடங்கினார். 1980களில் சிவாஜிகணேசன், கமல்ஹாசன், சிரஞ்சிவி உள்ளிட்ட முன்னணி நாயகர்களின் படத்தில் வில்லன் வேடத்தில்  நடித்துள்ளார். அத்திப்பூக்கள், திருமதி செல்வம், அஞ்சலி உள்ளிட்ட நெடுந்தொடர்களிலும் அவர் நடித்துள்ளார்.

 சென்னையில் வசித்து வந்த சிலோன் மனோகர் உடல் நலக்குறைவால் நேற்றிரவு காலமானார். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close