[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • BREAKING-NEWS மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
  • BREAKING-NEWS அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்

மிகப்பெரிய கனவு நனவாகிவிட்டது: சிவகார்த்திகேயன்

big-dream-coming-true-sivakarthikeyan

தன்னுடைய மிகப்பெரிய கனவு ஒன்று நனவாகிவிட்டதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிகுமார், தனது அடுத்த படத்தை சிவகார்த்திகேயனை வைத்து இயக்க உள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 2019ம் ஆண்டு திரைக்கு வர உள்ள இப்படத்தை 24ஏம் ஸ்டூடியோஸ் தயாரிக்க உள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் பெருமையான ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைவதன் மூலம் தனது மிகப் பெரிய கனவு நனவாகிவிட்டதாக நடிகர் சிவகார்த்திகேயன்  தெரிவித்துள்ளார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்தியாவின் பெருமையாக கருதப்படும், மற்றும் மிகவும் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி என சிவகார்த்தியேன் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close