[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் அறிவிப்பு வெளியானது

sivakarthikeyan-next-movie-announcement

‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிகுமார், தனது அடுத்த படத்தை சிவகார்த்திகேயனை வைத்து இயக்க உள்ளார்.

அறிமுக இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான படம் ‘ இன்று நேற்று நாளை’. விஷ்ணு விஷால் மியா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அவர் இயக்கத்தில் எந்தப் படங்களும் வெளியாகவில்லை.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ரவிகுமார் தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார். இது ரவிகுமாருக்கு இரண்டாவது படமாகும். சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட் உலகில் முன்னணி நடிகராக உருவெடுத்துவிட்டார். ரவிகுமாரிடம் கதையை கேட்ட சிவகார்த்தியேன் உடனடியாக நடிக்க ஒப்புதல் கூறிவிட்டதாக தெரிகிறது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். 2019ம் ஆண்டு இப்படம் திரைக்கு உர உள்ளது. 24ஏம் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close