[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

கவித்திறன் இருந்தால் பிழைக்கலாம்: இயக்குநர் லிங்குசாமி

director-lingusamy-speech

நம்மிடம் இருந்து எல்லாம் போன பின்பும் கவிதை எழுத தெரிந்திருந்தால் பிழைத்துகொள்ளலாம் என இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் லிங்குசாமியின் " லிங்கூ-அய்க்கூ" புத்தக வெளியிட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், கவிஞர் பிருந்தா சாரதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குநர் லிங்குசாமி பேசும்போது, “ தாகூரின் கவிதை ஒன்று ஞாபகம் வருகின்றது. சரியானவற்றை நீ தேர்ந்தெடுப்பதில்லை. சரியானவை உன்னை தேர்ந்தேடுக்கின்றன. அவ்வாறு அமைந்ததுதான் என்னுடைய அனைத்து நண்பர்களும்.. இந்த மேடையும்.. பாலாஜி சக்திவேல்தான் முதல்முறையாக என்னுடைய கவிதையை பார்த்து என்னை உதவி இயக்குனராக சேர்த்துவிட்டார். ஒரு மூன்று வரி கவிதை எழுதி 30 ரூபாய் பணம் வந்த பிறகு எப்படியும் எழுதி பிழைத்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில்தான் சென்னைக்கு வந்தேன். இப்போதும் இதற்கு முன்பும் கவிதை வெளியீட்டு விழாவில் கூறியது போன்று நம்மிடம் இருந்து எல்லாம் போன பின்பும் கவிதை எழுதத் தெரிந்தால் பிழைத்துக்கொள்ளலாம்” என தெரிவித்தார்.

விஷால் பேசியபோது “ எனக்கும் கவிதைக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. என்னை ஏன் லிங்குசாமி இங்கே அழைத்தார் என்று தெரியவில்லை. எனக்கு அவரை இயக்குநர் லிங்குசாமியாகதான் தெரியும். எனக்கு கவிதை, புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை. ஆனால் இன்று முதல் இயக்குநர் லிங்குசாமியின் “ லிங்கு-அய்க்கூ” புத்தகம் கண்டிப்பாக என்னுடைய அறையில் இருக்க போகிறது. இதுதான் நான் வாசிக்க போகும் முதல் கவிதை புத்தகம்” என தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close