[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!

ரஜினியின் 2.ஓ படத்திற்கு இடைவேளை இல்லை?

rajinikanth-2-o-updates

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.ஓ திரைப்படத்திற்கு இடைவேளையே இல்லை என்று புதியதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள திரைப்படம் ‘2.ஓ’. இதனை 400 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. பல மொழிகளில் வெளிவர உள்ள ஹாலிவுட் படம் என இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதன் ஆடியோ விழா சில மாதம் முன்பு துபாயில் மிக ஆடம்பரமாக நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்தின் படம் என்பதால் வழக்கம் போலவே உலக அளவில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் நடிகை எமி ஜாக்சன், அக்ஷய்குமார் என பலர் நடித்துள்ளனர். இது ஒரு சைன்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படம். முதன்முறையாக எழுத்தாளர் ஜெயமோகன் இதற்கு கதை எழுதியுள்ளார். 

இந்தப் படத்தின் தற்போதைய செய்தி ஒன்று வைரலாக வலம் வர தொடங்கியுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்த்த நேரத்தில் அதன் விஎஃப்எக்ஸ் வேலைகள் முடியாததால் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இப்படம் வழக்கம் போல 150 நிமிடங்கள் வரை நீளும் படம் இல்லை என்றும் மொத்த படமே 100 நிமிடங்கள் மட்டுமே என்றும் தகவல் கசிந்து வருகிறது. மிக குறைந்த அளவே நீளம் உள்ளதால் இப்படத்திற்கு இடைவேளை இருக்குமா என்ற சந்தேகமும் புதியதாக தோன்றி உள்ளது. ஹாலிவுட் அளவு பேசப்பட வேண்டும் என்பதால் பல வெளிநாட்டு தொழில் நுட்ப வல்லுர்களை வைத்து இதன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. தொழில்நுட்பத்தை போலவே அதன் நீளமும் ஹாலிவுட் அளவுக்கு இருக்க வேண்டும் என படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதனால் இந்தளவுக்குப் படத்தை சுறுக்கி வெளியிட உள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. ஆனால் படக்குழு தரப்பு இந்தத் தகவலை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close