[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.43 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.56-ஆக விற்பனை
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் வைகோ மனுதாக்கல்
  • BREAKING-NEWS காரைக்குடி- சென்னை செல்லும் பல்லவன் விரைவு ரயில் திருச்சி அருகே கிராப்பட்டியில் ரயிலின் என்ஜின் தடம் புரண்டு விபத்து
  • BREAKING-NEWS ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி பேட்டிங்
  • BREAKING-NEWS அவசியம் இருந்தால் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: புக்கத்துறையில் கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் ரூ.48 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை
  • BREAKING-NEWS கிராம பஞ்சாயத்து ஊற்று போன்றது; கவனமின்றி இருந்ததால் சாக்கடை கலந்துவிட்டது - கமல்ஹாசன்

ரசிகர்கள் மத்தியில் குத்தாட்டம் போடும் சூர்யா: பரபர வீடியோ

actor-surya-dance-viral-video

கேரள ரசிகர்கள் மத்தியில் ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடலுக்கு நடிகர் சூர்யா குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் சூர்யா ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படத்தில், சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அத்துடன், கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வருகிற பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடல் ஏற்கனவே யூடியூப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் கேரள ரசிகர்கள் மத்தியில் ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடலுக்கு நடிகர் சூர்யா குத்தாட்டம் போட்டுள்ளார். பாடலின் வரிகளுக்கு ஏற்ப உற்சாகத்தில் சூர்யா குத்தாட்டம் போடுவது பலரையும் ரசிக்கும் வைக்கும் விதமாக உள்ளது. சூர்யா குத்தாட்டம் போடும்போது ரசிகர்களும் உற்சாகத்தில் ஆடுகின்றனர். இந்தக் காட்சிகள் பார்ப்பதற்கு அழகாக உள்ளது. இதனை சூர்யா ரசிகர்கள் பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

முன்னதாக இப்பாடலில் இடம்பெற்றுள்ள ‘விரட்டி விரட்டி வெளுக்கத் தோணுது… அதிகாரத் திமிர… பணக்கார பவர…’ என்ற வரிகள் அரசியல்வாதிகளை கெட்டவர்கள் போல் சித்தரிக்கும் வகையில் உள்ளதாகவும், இளைஞர்களை வன்முறையில் ஈடுபட தூண்டுவதாக உள்ளதால், அந்த வரிகளை நீக்க வலியுறுத்தியும் விருகம்பாக்கத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி சதீஷ் என்பவர் சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close