[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

‘குட் லக் ஸ்வீட்டி’:அனுஷ்காவிற்கு பிரபாஸ் அனுப்பிய மெசஜ்!

actor-prabhas-message-to-anushka

அனுஷ்கா நடிப்பில் நேற்று வெளியான பாகமதி படத்தின் ட்ரெய்லரை பார்த்து நடிகர் பிரபாஸ் ‘குட் லக் ஸ்வீட்டி’ என்று அனுஷ்காவிற்கு மெசஜ் அனுப்பி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். 

அனுஷ்கா செட்டி நடிப்பில், ஜி.அசோக் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் ‘பாகமதி’.  இந்தப் படத்தின் மிரள வைக்கும் ட்ரெய்லர் நேற்று வெளியாகியது. ஹாரர் மற்றும் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்லுக் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், நேற்று வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர், பாகமதி  படம் குறித்த எதிர்ப்பார்பை ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், படத்தின் ட்ரெய்லரை பார்த்த நடிகர் பிரபாஸ் அனுஷ்கா மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். பாகுபலி படத்தி்ற்கு பிறகு பிரபாஸ் - அனுஷ்கா திருமணம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. இது குறித்து அனுஷ்கா தரப்பிலும், பிரபாஸ் தரப்பிலும் எந்தவித பதிலும் தெரிவிக்கப்படவில்லை. அதன்பின்பு, பிரபாஸ் சாஹோ திரைப்படத்தில் நடிப்பதில் பிஸியானார்.  இந்நிலையில், நேற்று வெளியான பாகமதி படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த பிரபாஸ் அனுஷ்காவிற்கு மெசெஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அவர் அனுப்பிய மெசெஜில்‘‘கடிமான உழைப்பு மற்றும் சிறந்த அர்பணிப்பு .. குட் லக் ஸ்வீட்டி. அசோக் மற்றும் படக்குழு அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார். பிரபாஸின் இந்தச் செய்தியால் மீண்டும் இந்த ஜோடிகள் குறித்த வதந்திகள் பரவத் தொடங்கியுள்ளன. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close