[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு; நாளை முதல் அமலுக்கு வருகிறது
  • BREAKING-NEWS மூத்த குடிமக்கள், 8 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைக்கப்படும் - சுஷ்மா ஸ்வராஜ்
  • BREAKING-NEWS டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜை புரட்சித்தலைவி அம்மா என்று அழைத்து மகிழ்வேன் - புதுச்சேரி முதலமைச்சர்
  • BREAKING-NEWS பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் வாகனம் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம் - அரசு
  • BREAKING-NEWS மாணவர் சரத்பிரபுவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் ஈரோடு சேர்ப்பு
  • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்காலத்தடை - உயர்நீதிமன்றம்
சினிமா 08 Jan, 2018 06:53 PM

300 கோடி பட்ஜெட் ஹிந்தியில் சீயான் விக்ரம்!

vikram-signed-300-crore-budget-in-hindi

இந்தியில் 300 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கும் சரித்திர பின்னணிக் கொண்ட திரைப்படத்தில் நடிகர் விக்ரம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

சரித்திரப் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள இந்தப் படத்திற்கு ’மஹாவீர் கர்ணா’  என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விக்ரம் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ’என்னு நிண்டே மொய்தீன்’ என்ற மலையாள காவியப்படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் தான் மஹாவீர் கர்ணா படத்தையும் இயக்குகிறார். 

300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நியூயார்க்கைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது. மேலும், விக்ரம் நடிப்பில் ஜனவரி 12 ஆம் தேதி ’ஸ்கெட்ச்’ திரைப்படம் வெளிவர உள்ளது. அதனைத்தொடர்ந்து, கெளதம் மேனனின் துருவ நட்சத்திரம், ஹரியின் சாமி 2 ஆகிய திரைப்படங்களுக்கு ரசிகர்களுக்கு விருந்து படைக்க விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், விக்ரமின் இந்தப் புதிய அறிவிப்பு அவரின் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது.  
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close