[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள ஊதியத்தை பெறப்போவதில்லை- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: பாம்பன் அருகே சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வுக்கு டீசல் விலை உயர்வை காரணம் காட்டுவதை ஏற்க முடியாது- வைகோ
  • BREAKING-NEWS பேருந்து கண்டன உயர்வை கண்டித்து தமிழகத்தில் ஜன.24இல் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக ஜன.27 இல் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பங்கேற்கும்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து ஜன.24 ஆம் தேதி பாஜக போராட்டம் நடத்தும்-தமிழிசை
  • BREAKING-NEWS ஜன. 12 இல் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு நாளை மறுநாள் நடைபெறும்
சினிமா 02 Jan, 2018 05:05 PM

“நகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு”: வைரமுத்து வருத்தம்!

vairamuthu-explanation-letter

சமூக வலைதளங்களில் தனது பேச்சு திரித்து கூறப்பட்டு வருவதாக கூறி பாடலாசிரியர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொது வெளிகளில் என்னுடைய பேச்சிலும், பேட்டியிலும் நான் சொல்லாத செய்திகளைச் சொல்லியதாகப் பதிவிடுவதில் சில அன்பர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அது உண்மை என்று கருதிவிடும் அபாயமும் இருக்கிறது. அதனால் என்னுடைய சுட்டுரைப் பக்கத்திலும், என் பெயரில் வெளிவரும் மெய்யான அறிக்கைகளிலும், தொலைக்காட்சியின் உண்மையான பதிவுகளிலும், நான் சொல்லியது மட்டுமே உண்மை என்று தமிழ் உலகம் நம்பும் என்று நம்புகிறேன்.

உண்மைக்கு வெளியே தங்கள் வாக்கியங்களை என் வாக்கியங்களாக வெளியிட்டுக்கொள்ளும் நண்பர்கள் நகைச்சுவைக்காக அப்படிச் செய்திருக்கக்கூடும். அவர்கள்மீது எனக்கு எந்த வகையிலும் வருத்தம் இல்லை. நகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை அவர்களும் அறிவார்கள்; தமிழர்களும் புரிவார்கள்” என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close