காஞ்சிபுரம் கிராமத்தில் கழிப்பறைக் கட்டிக் கொடுத்த நடிகை த்ரிஷாவின் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
த்ரிஷாவுக்கு சமூக சேவை புதியதல்ல; அவர் தெருவோரங்களில் ஆதரவில்லாமல் கிடக்கும் நாய்களை அரவணைப்பதில் அதிக அக்கறைக் காட்டி வருகிறார். இந்தச் சேவையோடு மேலும் பல சேவைகள் செய்வதற்காக யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ணத் தூதுவராக அவர் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். அந்த அமைப்பு மேற்கொண்டு வரும் சமூக மேம்பாட்டு பணிகளில் இப்போது தன்னை இணைத்து கொண்டுள்ளார் த்ரிஷா. காஞ்சிபுரம் மாவட்டம் வட நெமிலி கிராமத்திற்கு வருகை தந்த த்ரிஷா, அங்குள்ள பொதுமக்களைச் சந்தித்து கலந்துரையாடினார். மக்கள் சுகாரதாமற்ற முறையில் கழிப்படங்களை பயன்படுத்துவது சம்பந்தமான விழிப்புணர்வுகள் குறித்து குறிப்பிட்டு பேசினார். கழிப்பறையின் அவசியம், கழிப்பறை இல்லாததால் ஏற்படும் சுகாதாரக்கேடு மற்றும் பிரச்னைகள் குறித்தும் விரிவாக விவாதித்தார்.
அதன் அடுத்த கட்டமாக அவர் கழிப்பறை ஒன்றைக் கட்டி காண்பித்தார். மேலும் அப்பகுதி மக்களின் தேவைகளை அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து கொண்டார். அவர் ஈடுபாடுடன் கழிப்பறைக்கட்டிய வீடியோ காட்சி இப்போது சமூக வலைதளத்தில் பரபரப்பாக அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
முள்காட்டில் வீசப்பட்ட குழந்தையை நாய்கள் தின்ற அவலம்
ஆசிஃபா பற்றி பேசியதால் மாணவி இடைநீக்கம்: மனம் மாறிய கல்லூரி நிர்வாகம்
தீபக் மிஸ்ராவை தகுதி நீக்க என்ன செய்ய வேண்டும் ? சட்டம் சொல்வது என்ன ?
40 ஆண்டுகளுக்குப் பின் யூடியூப் உதவியால் ஒன்று சேர்ந்தக் குடும்பம்!
சிபிஎஸ்இ குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் இல்லை
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்