[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு
  • BREAKING-NEWS யோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி
  • BREAKING-NEWS வேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
  • BREAKING-NEWS யோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்

இத்தாலியில் மேலும் ஒரு நடிகை திருமணம்!

actress-surveen-chawla-got-married-in-italy

நடிகை அனுஷ்கா சர்மா- விராத் கோலி திருமணம் சமீபத்தில் இத்தாலியில் நடந்து முடிந்திருக்கிறது. நடிகை இலியானாவும் சமீபத்தில் தனது காதலரை திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாயின. இப்போது மேலும் ஒரு நடிகை இத்தாலியில் திருமணம் செய்துள்ளார். 

தமிழில் வசந்த் இயக்கிய, ‘மூன்று பேர் மூன்று காதல்’, சாரதா ராமநாதன் இயக்கிய ’புதிய திருப்பங்கள்’, அர்ஜூனின் ’ஜெய்ஹிந்த் 2’ ஆகிய படங்களில் நடித்திருப்பவர் இந்தி நடிகை சுர்வின் சாவ்லா. இவர் தொழிலதிபர் அக்‌ஷய் தாக்கர் என்பவரை காதலித்து வந்தார். இதையடுத்து இத்தாலியில் திருமணம் செய்துள்ளனர். இதை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சுர்வின். ஆனால், இவர்களது திருமணம் இரண்டு வருடங்களுக்கு முன்பே நடந்து விட்டதாக மும்பை பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

‘சுர்வினுக்கும் அக்‌ஷய்க்கும் தெரிந்த நண்பர் மூலமாக இருவரும் அறிமுகமாகியுள்ளனர். பின்னர் காதலிக்கத் தொடங்கினர். 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் தெற்கு இத்தாலியில் திருமணம் செய்துகொண்டனர். இதுவரை அதை வெளிப்படுத்தவில்லை. வரும் ஜனவரி மாதம் மும்பையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தனர்’ என்று அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close