[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு
  • BREAKING-NEWS யோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி
  • BREAKING-NEWS வேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
  • BREAKING-NEWS யோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்

ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் ஓவியா

oviya-answers-to-fans-questions

ரசிகர்களின் கேள்விகளுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை ஓவியா பதிலளிக்க உள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

‘களவாணி’ படம் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தவர் நடிகை ஓவியா. ‘கலகலப்பு’, ‘மத யானை கூட்டம்’, ‘யாமிருக்க பயமேன்’ உள்ளிட்ட படங்களில் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சிதான் அவருக்கு ரசிகர் பட்டாளத்தை கூட்டியது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளரான ஆரவ் மீது அவர் கொண்ட காதல் மற்றும் அவரின் இயல்பான குணத்தால் சமூக வலைத்தளங்களில் ஓவியாவை அவரது ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி நேரத்தில் #OviyaArmy என்கிற ஹேஷ்டேக்கையும் அந்த நேரத்தில் ட்ரெண்டாக்கினர். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியாவுக்கு நல்ல படங்களின் வாய்ப்பும் அமைந்துள்ளது.

இந்நிலையில் தனது ரசிகர்களின் கேள்விக்கு நடிகை ஓவியா பதிலளிக்க உள்ளார். #AskOviyaSweetz என்கிற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ரசிகர்கள் தங்களது கேள்விகளை ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கலாம். ரசிகர்களின் கேள்விகளுக்கு டிசம்பர் 20 ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஓவியா பதிலளிக்க உள்ளார். ரசிகர்கள் என்ன கேள்வி கேட்கப்போகிறார்கள் என ஓவியா தற்போது வியப்பாக உள்ளாராம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் உங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் என்ன? இன்னும் ஆரவை நீங்கள் காதல் செய்கிறீர்களா..? உள்ளிட்ட ஏகப்பட்ட கேள்விகளை சரமாரியாக கேட்க ரசிகர்களும் தயாராகி வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close