[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

பிரியங்கா சோப்ரா 5 நிமிடங்கள் நடனமாட ரூ.5 கோடி!

priyanka-to-be-paid-rs-5-crores-for-5-minute-performance-at-awards-show

பிரியங்கா சோப்ரா 5 நிமிடங்கள் மேடையில் நடனமாட ரூ.5 கோடி கொடுக்க மும்பை விருது வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சம்மதித்துள்ளனர்.

பொதுவாக நடிகைகள் நிகழ்ச்சிகளில் நடனமாடுவது வழக்கம். ஆனால், பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ரா தற்போது மிகவும் பிஸியாக உள்ளார். தற்போது குவாண்டிகோ என்ற அமெரிக்க டிவி சீரியசில் நடித்து வருகிறார். விரைவில் இந்தியா திரும்ப உள்ளதாக பிரியங்கா அவரது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மும்பையில் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள பிரபலமான விருது வழங்கும் விழாவில் பிரியங்கா நடனமாட ரூ.5 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளார். அவர் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே நடனமாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக 2016 ஆம் ஆண்டு தயாரிப்பாளர்கள் சங்கமான கில்டு விருது வழங்கும் விழாவில் பிரியங்கா நடனமாடினார், அதனால் அந்நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைந்ததாக கூறப்படுகிறது. தற்போது நடக்கவுள்ள நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்களான ரன்வீர் சிங், சாஹித் கபூர், கத்ரினா கைஃப், சித்தார்த் மல்ஹோத்ரா, ஜேக்குலின் ஃபெர்னாண்டஸ் மற்றும் பூமி பெட்னேகர் ஆகியோரும் நடனமாட உள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close