[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

சீனு ராமசாமி இயக்கத்தில் உயதநிதி ஸ்டாலின்..!

udhayanidhi-stalin-joins-hand-with-seenu-ramasamy

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்.

தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் 'ஒரு கல் ஒரு கண்ணாடி'  படம் மூலம் கதாநாயகனான அறிமுகம் ஆனார். இந்தப் படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. அந்த நம்பிக்கையில் அவர் தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார்.  நயன்தாராவுடன் 'இது கதிர்வேலன் காதல்', 'நண்பேன்டா' போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் அவர் நடிப்பில் 'இப்படை வெல்லும்' வெளியானது. ஆனால் அந்தப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உயதநிதி ஸ்டாலின் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 19-ஆம் தேதி தொடங்குகிறது.

இயக்குநர் சீனு ராமசாமி 'தென்மேற்கு பருவக்காற்று' படத்திற்காக தேசிய விருது பெற்றவர். இவர் இயக்கத்தில் வெளியான 'தர்மதுரை' படத்திற்கும் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது விஜய் சேதுபதியை வைத்து மாமனிதன் படத்தை இயக்கும் சீனு ராமசாமி, அடுத்த உதயநிதியை வைத்து இயக்க உள்ளார். சீனு ராமசாமியோடு, உதயநிதி கைகோர்ப்பதால் நிச்சயம் படம் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close