[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!

மதத்திற்காக பெயரை மாற்றிக்கொள்ளமாட்டேன்: மணிமேகலை விளக்கம்

i-will-not-convert-nor-change-my-name-manimegalai

நான் மதம் மாறவில்லை. மேலும் எந்த மதத்திற்காக என் பெயரை மாற்றிக் கொள்ளமாட்டேன் என்று தொலைக்காட்சி தொகுப்பாளர் மணிமேகலை விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் நடன இயக்குநர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மணிமேலை. “எவ்வளவோ எடுத்து சொல்லியும் என் அப்பாவை சமாதானம் செய்ய முடியவில்லை. ஆகவே திடீர் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம்” என்று ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அந்த செய்தியை படித்த அவரது ரசிகர்கள் பலருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் அவரை பலர் வாழ்த்தியிருந்தனர். அவரது முடிவை வரவேற்று இருந்தனர்.

இந்நிலையில் அவர் தனது கணவருக்காக தனது பெயரை மாற்றிக் கொண்டதாக செய்தி வெளியானது. இதுகுறித்து பிரபல ஆங்கில ஊடகத்திற்கு மணிமேலை விளக்கம் அளித்துள்ளார். அதில், “என் திருமணப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்தேன். பல நண்பர்கள் என்னை வாழ்த்தினார்கள். பலர் தங்களின் மகிழ்ச்சியை எனக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவித்தார்கள். பலர் எங்கள் திருமணத்தை பற்றி மதம் சார்ந்த விஷயத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள். அவர்களின் அக்கறையை நான் புரிந்து கொள்கிறேன். என்னிடம் மதம் மாற வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை. என் கணவரின் வீட்டுக்காரர்கள் என்னை கட்டாயப்படுத்தவும் இல்லை. ஒருவேளை அவர் தங்களின் மதம் சார்ந்த கோயில்களுக்கு அழைத்து போனால் அங்கே போய் சர்வீஸ் செய்வேன். என் பெற்றோர் எனக்கு அழகான பெயரை வைத்திருக்கிறார்கள். நான் மதக் காரணங்கள் எதற்காகவும் அந்தப் பெயரை மாற்றிக் கொள்ளமாட்டேன்” என்று மணிமேகலை தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close