[X] Close
JUST IN
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
 • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
 • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
 • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
 • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
 • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS ‘ஐஎன்எஸ் கல்வாரி’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 14 வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS குஜராத் மாநிலத்தில் 2 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
 • BREAKING-NEWS வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
சினிமா 04 Dec, 2017 08:13 PM

கலகலப்பு 2 படப்பிடிப்பு நிறைவடைந்தது

it-s-a-wrap-kalakalappu-2-says-actor-jiiva

கலகலப்பு 2 படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளது. அதில் பங்கு கொண்டு நடித்த நடிகர், நடிகைகள் பிரியா விடை பெற்றனர். 

சுந்தர். சி இயக்கும் கலகலப்பு 2 படத்தை அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அக்டோபர் 4ம் தேதி காரைக்குடியில் தொடங்கி 15 நாட்கள் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காசியில் நடந்தது. இதனையடுத்து இந்தூர், புனே மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் நடைபெற்றது. ஒட்டுமொத்த படப்பிடிப்பும் டிசம்பர் இரண்டாம் வாரத்துடன் நிறைவடையும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். 

இந்நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபில் சிட்டியில் நடைபெற்று வந்தது. தற்போது முழு படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் ட்விட்டரில் செய்தி இட்டுள்ளனர். மேலும் படக்குழுவினர் அனைவரும் பிரியா விடை பெற்ற புகைப்படங்களையும் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

கலகலப்பு 2ஆம் பாகத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி, ராதாரவி, வி.டி.வி.கணேஷ், யோகிபாபு, ரோபோ சங்கர், மனோபாலா, சிங்கம்புலி, வையாபுரி, சந்தானபாரதி, அனுமோகன் ஆகியோர் நடிக்கின்றனர். 2012 ஆம் ஆண்டு கலகலப்பு முதல் பாகம் முழுக்க முழுக்க காமெடி கதையாக உருவாகியிருந்தது. அந்தப்படம் வசூலில் சாதனை படைத்ததைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. 

போட்டோ கேலரி

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close