[X] Close
JUST IN
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
 • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
 • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
 • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
 • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
 • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS ‘ஐஎன்எஸ் கல்வாரி’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 14 வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS குஜராத் மாநிலத்தில் 2 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
 • BREAKING-NEWS வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
சினிமா 04 Dec, 2017 07:03 PM

தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்ய வேண்டும்: சேரன் ஆவேசம்

director-cheran-oppos-to-vishal

தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்ய வேண்டும் என இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

இன்று தயாரிப்பாளர்களின் சார்பில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சேரன், கூட்டாக ஒரு அறிக்கையை வாசித்தார். அப்போது அவர், “ஆன்லைன் பைரசி, கேபிள் டிவி திருட்டு போன்ற எல்லா நடவடிக்கைகளுக்கும் அரசாங்கத்தையே நாம் சார்ந்து இயங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவ்வப்போது அரசியல்வாதிகளை, அமைச்சர்களை மிரட்டும் தொனியில் ஊடகங்களில் விஷால் பேசுவதும், அரசியலில் குதிக்கப் போவதாக அறிவிப்புகளை வெளியிடுவதும், இப்போது சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதும் என தொடரும் அவரது பல நடவடிக்கைகள் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதிப்பதாகும். இது எதிர்காலத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தயாரிப்பாளர்களுக்கும், சங்கத்திற்கும் எவ்வித ஒத்துழைப்பும் கொடுக்க முடியாத சூழலை உருவாக்கும். இதனால் தயாரிப்பாளர்களின் நிலை மட்டுமல்லாமல்; நமது திரை உலகமே ஒட்டுமொத்தமாக முடங்கும். அழியும் நிலைக்கு தள்ளப்படும்” என்றார்.

மேலும், “தமிழ் திரை உலகம் என்பது வெறும் 1230 தயாரிப்பாளர்களை மட்டும் கொண்டதல்ல. அந்தத் தயாரிப்பாளர்களை நம்பி இருக்கும் 24 சங்கங்களின் தொழிலளர்கள், விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என ஆரம்பித்து போஸ்டர் ஒட்டுபவர்கள் வரை சுமார் 10 லட்சம் பேரின் வாழ்க்கை இதற்குள் அடங்கி உள்ளது என்பது உண்மை. இதை உங்கள் கவனத்திற்கு வராமல் போனது எப்படி என்று தெரியவில்லை. மேலும் தயாரிப்பாளரான இந்த எட்டு மாதத்தில் நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே செய்து முடிக்கவில்லை. இந்த சூழலில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக கூறியிருக்கிறீர்கள். இதனால் சங்கத்தின் வேலைகளில் கவனம் செலுத்த முடியாது. எனவே தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டும் உங்கள் இயலாமையை கருத்தில் கொண்டும் தயவு செய்து தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என அனைத்து தயாரிப்பாளர் சார்ப்பில் கேட்டுக் கொள்கிறோம்” என்றும் சேரன் கூறினார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close