[X] Close
JUST IN
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
 • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
 • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
 • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
 • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
 • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS ‘ஐஎன்எஸ் கல்வாரி’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 14 வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS குஜராத் மாநிலத்தில் 2 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
 • BREAKING-NEWS வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
சினிமா 04 Dec, 2017 02:16 PM

பத்மாவதி விவகாரம்: தீபிகாவுக்கு ஆதரவளிக்க கங்கனா மறுப்பு

kangana-ranaut-refuses-point-blank-to-lend-support-to-deepika-padukone

பத்மாவதி திரைப்படம் தொடர்பான பிரச்னையில் தீபிகா படுகோனேவுக்கு உதவ, பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மறுத்துவிட்டார்.

ராஜபுத்திர வம்சத்தினரை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி, பத்மாவதி படத்தை திரையிட நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட ‌பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாநில பாஜக தலைவர்களும் இந்தத் திரைப்படத்தை வெளியிட ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் தீபிகா படுகோனே தலையை வெட்டி கொண்டுவருபவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் தருவதாகவும் பாஜக தலைவர்கள் சிலர் தெரிவித்திருந்தனர். வெளிநாடுகளிலும் இத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை கோ‌ரி, எம்.எல்.சர்மா என்பவர் உச்ச‌ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை உச்சநீதிமன்ற தள்ளுபடி செய்தது.

இதற்கிடையே அமீர்கான் உட்பட பாலிவுட் நடிகர்கள் பலரும் தீபிகாவுக்கு படுகோனேவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அத்துடன் பாலிவுட் நடிகை ஷபானா ஆஷ்மி தீபிகாவிற்கு ஆதரவாக, ‘தீபிகாவிற்கு உதவுங்கள்’ என்று மனுவில் பிரபலங்கள் மற்றும் அனைத்து தரப்பினரிடமும் கையெழுத்து பெற்றுவருகிறார். இதுதொடர்பாக பிரபல பாலிவுட் கங்கனா ரனாவத்தை சந்தித்து, ஷபானி கையெழுத்துயிடும்படி கோரியுள்ளார். அப்போது அமைதியாக இருந்த கங்கானா, கையெழுத்திடவும் மறுத்துவிட்டதாக கூறப்பட்டுகிறது. கங்கானாவின் இந்த செயலால் அதிர்ச்சியுடனும், அதிருப்தியுடனும் ஷபானா அங்கிருந்து சென்றுவிட்டார். சில வருடங்களுக்கு முன் தீபிகா மற்றும் கங்கானாவுக்கு இடையே இருந்த தொழில் கருத்து வேறுபாடுகளே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close