[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழ்ப் படத்தில் நடிக்க சன்னி லியோனுக்கு பயிற்சி

sunny-leone-is-doing-straight-tamil-film

தமிழில் சரித்திர படத்தில் நடிக்கிறார் சன்னி லியோன். இதற்காக அவருக்கு சண்டை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் பிரபலமான நடிகை சன்னி லியோன். இப்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இப்போது முழுநீள தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்தப் படத்தை வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். ஸ்டீவ்ஸ் கார்னர் என்ற நிறுவனம் மூலம் பொன்ஸ் ஸ்டீஃபன் தயாரிக்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இந்த படம், மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்படுகிறது. 

சரித்திர படமான இதில் நடிக்க கத்திச்சண்டை, குதிரையேற்றம் மற்றும் மற்ற சண்டைக் கலைகளையும் கற்று வருகிறார் சன்னி லியோன். இதற்காக ஆந்திராவில் இருந்து சிறப்பு பயிற்சியாளர் ஒருவர் அவருக்கு பயிற்சி அளித்து வருகிறார். இந்த பிரமாண்ட  படத்துக்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். 
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும்.

’இந்த படத்துக்கு பிறகு என் அடையாளம் நிச்சயம் மாறும். ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க எனக்கு பிடிக்கும். இந்த மாதிரி கதைகளுக்காக சில வருடங்களாக காத்திருக்கிறேன். வடிவுடையான் இந்த கதையை  சொன்னதில் இருந்தே நான் படத்துக்கக தயாராக ஆரம்பித்து விட்டேன்’ என்றார் சன்னி லியோன். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close