[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

நகுல் நடிக்கும் ‘செய்’ ஆடியோ வெளியீடு

nakkul-s-sei-movie-audio-launch

நகுல் நடிக்கும் செய் படத்தின் ஆடியோ இன்று பிரசாத் லேப்பில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.

நான்கு நடிகர்களில் ஒருவராக பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நகுல். ஆனால் அவர் நடித்த ‘காதலின் விழுந்தேன்’ அவரை ஹீரோவாக மேலே உயர்த்தியது. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘நாக்க மூக்க’ பாடல் ஒலிக்காத ஊரில்லை. அந்தளவுக்கு ஆடியோவும் பெரிய ஹிட். தற்சமயம் அவர், ‘செய்’ என்ற படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. படத்தை ராஜ் பாபு இயக்கியிருக்கிறார். பிரகாஷ்ராஜ், நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கான கதையை மட்டும் ராஜேஷ் கே. ராமன், விக்னேஷ் ஆகிய இருவரும் எழுதியிருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்று சென்னை பிரசாத் லேப்பில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் நகுல், யுகபாரதி, நாயகி சந்திரிக்கா ரவி, மதன் கார்க்கி என பலர் கலந்து கொண்டனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close