[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS ரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

'விஸ்வரூபம் 2' படபிடிப்புக்கு திரும்பினார் கமல்

kamal-haasan-has-resumed-shooting-for-the-film-in-chennai

நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம்-2 படப்பிடிப்புக்கு திரும்பியுள்ளார்.

கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் உள்ளிட்ட பலர் நடித்த படம், விஸ்வரூபம். இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை கமல்ஹாசன் உருவாக்கியுள்ளார். இந்தப் படத்திலும் ராகுல் போஸ், பூஜா குமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இதனை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்து வருகிறார்கள். இந்த படத்தை கமல்ஹாசனே வெளியிட இருக்கிறார். 

படத்தின் 95 சதவிகித காட்சிகள் முடிவடைந்துவிட்டன. சில காட்சிகள் மட்டுமே இன்னும் மீதமுள்ளது. இதன் ஃப்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மே மாதம் வெளியானது. 

இதனிடையே அரசியல் பிரவேசம் தொடர்பாக கமல் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அரசியல் கட்சி துவங்குவதை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டார். பிறந்தநாளன்று ரசிகர்களை சந்தித்து ஆலோசனை செய்தார். தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். 

இந்நிலையில், கமல்ஹாசன் விஸ்வரூபம்-2 படப்பிடிப்புக்கு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாடல் ஒன்றிற்கான காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. விஸ்வரூபம்2 படம் குடியரசு தினத்திற்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விஸ்வரூபம்2 படத்தின் ட்ரெய்லர் அடுத்தமாதம் வெளியாகும் என்று தெரிகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close