[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

ரஜினியின் '2.0' இணைய ஒளிபரப்பு உரிமையை பெற்றது அமேசான் பிரைம்

amazon-prime-got-2-0-internet-broadcasting-rights

'2.0' திரைப்படத்தை இணையத்தில் ஒளிபரப்புவதற்கான உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் '2.0'. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. எமி ஜாக்சன், அக்ஷய் குமார் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில் படத்தை இணையத்தில் ஒளிபரப்புவதற்கான உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று பதிப்புகளுமே அமேசான் பிரைம் இணையதளத்தில் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக இதுவரை இல்லாத அளவு அதிக விலைக்கு உரிமைகள் பெறப்பட்டிருப்பதாக தெரிகிறது. சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாராகி வரும் '2.0' திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை சுமார் 110 கோடி ரூபாய்க்கு ஏற்கனவே விற்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close