[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்
  • BREAKING-NEWS டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது
  • BREAKING-NEWS புதிய தலைமைச்செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்திருந்தால் லஞ்ச ஒழிப்புதுறை விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கலாமே?- உயர்நீதிமன்றம்

டிசம்பர் 3-ல் வேலைக்காரன் இசை வெளியீடு

velaikkaran-audio-release-on-december-3

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெறுகிறது.

மோகன் ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்தில், நயன்தாரா முதன்முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான ஃபஹத் ஃபாசில், இந்தப் படத்தின் மூலம் வில்லனாகத் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன், பிரகாஷ்ராஜ், சினேகா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி  படம் ரிலீஸாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் டிசம்பர் 3-ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது.  படத்தை தயாரிக்கும் '24 ஏஎம் ஸ்டுடியோ' தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள ‘கருத்தவன்லாம் கலீஜா’ மற்றும் ‘இறைவா’ ஆகிய இரண்டு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close