[X] Close
JUST IN
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
 • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
 • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
 • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
 • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
 • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS ‘ஐஎன்எஸ் கல்வாரி’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 14 வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS குஜராத் மாநிலத்தில் 2 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
 • BREAKING-NEWS வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
சினிமா 24 Nov, 2017 11:21 AM

மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த நிவின் பாலி!

richie-will-determine-everything-for-me-in-tamil-industry-nivin-pauly

நிவின் பாலி, நட்டி என்கிற நட்ராஜ், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உட்பட பலர் நடித்துள்ள படம், ’ரிச்சி’. கன்னடத்தில் வெளியான ’உல்லிடவரு கன்டன்டே’- படத்தின் ரீமேக். மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கவுதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார்.  

டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகும் இந்தப் படம் நிவின் பாலி கூறும்போது, திரைத்துறைக்கு வந்த நாள் முதலே தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ’நேரம்’ இருமொழி படம். இதுதான் என் முதல் நேரடி தமிழ்ப்படம். பிரேமம் படம் தமிழில் ஹிட்டாகும் என்று நினைத்து பார்க்கவில்லை. ’ரிச்சி’ படத்தின் ஒரிஜினலை பார்த்தேன். இதில் எனக்கு நடிக்க வாய்ப்பிருப்பது தெரிந்ததால் சம்மதித்தேன். ஆரம்பத்தில் இயக்குனர் கவுதமிடம் இதில் தமிழ் நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்றேன். ஆனால், அவர் நீங்கள் நடித்தால்தான் சரியாக இருக்கும் என்றார். தமிழுக்காக காட்சியில் மாற்றங்கள் செய்திருக்கிறார். என்னைச் சுற்றி தமிழ்ப் பேசுபவர்களை இருக்க வைத்துக்கொண்டு தமிழ்க் கற்றேன்.

தமிழில் யார் இயக்கத்தில் நடிக்க ஆசை என்று கேட்கிறார்கள். மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எனக்கு அந்த ஆசை இருக்கிறது. இருவரும் ஒரு படத்தில் நடிப்பதற்காக பேசினோம்.  கால்ஷீட் பிரச்னை காரணமாக அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அடுத்து கவுதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ் என நிறைய பேர் இருக்கிறார்கள். தொடர்ந்து தமிழில் நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். அதை ரிச்சி படம்தான் தீர்மானிக்கும். இந்தப் படம் ஹிட்டானால் என்னை அழைப்பார்கள். தோல்வி அடைந்தால் என் நம்பரை கூட டெலிட் பண்ணி விடுவார்கள்’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close