[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் வார்டு வாரியாக மகளிர் குழு மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறது: தமிழிசை
  • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது
  • BREAKING-NEWS கோடி கோடியாக கொட்டிக்கொடுத்தாலும் ஆர்.கே.நகரில் அதிமுக டெபாசிட் பெறாது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS இலங்கை அணி எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 216 ரன்கள் வெற்றி இலக்கு
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் சர்வ சாதாரணமாக பணப்பட்டுவாடா நடக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து ஆர்.கே. நகரில் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா ஆய்வு
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ரூ.100 கோடி வரை பணப்பட்டுவாடா நடந்ததாக ஸ்டாலின் புகார்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகரில் டிடிவி தினகரன் ஆதரவாளரிடமிருந்து ரூ. 20 லட்சம் பறிமுதல்
  • BREAKING-NEWS ஒகி புயல் பாதிப்பு குறித்த அறிக்கையை இன்று மத்திய அரசுக்கு அனுப்புகிறது தமிழக அரசு
  • BREAKING-NEWS கொளத்தூர் செல்லப்பிள்ளை என்றாலும் ஆர்.கே. நகரை வளர்ப்புப் பிள்ளையாக கருதி வளர்ச்சிபெற வைப்பேன் - மு.க. ஸ்டாலின்
  • BREAKING-NEWS பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சென்னை ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் மாநிலம் போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்த வேண்டும்- ப. சிதம்பரம்
  • BREAKING-NEWS நாகை: கடல் சீற்றத்தால் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் 2ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
  • BREAKING-NEWS கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசித் தாக்குதல்
சினிமா 23 Nov, 2017 05:05 PM

திருமணம் ஆகவில்லை என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபித்த நடிகை 

the-actress-who-proved-by-the-court-that-she-was-not-married

பாகிஸ்தான் சினிமாவின் பிரபலமான நடிகை ஒருவர் தனக்கு திருமணம் ஆகவில்லை என்பதை நீதிமன்றத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.

பைசலாபாத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் ஆதிக் உர் ரெஹ்மான். இவர் 2007 ஆம் ஆண்டு தனக்கும் பாகிஸ்தான் நடிகை மீராவிற்கு திருமணம் நடந்ததாக அறிவித்தார். மேலும் மீரா இந்த திருமணத்தை ரசிகர்களிடம் இருந்து மறைப்பதற்காவே வெளியில் சொல்லாமல் இருப்பதாக கூறினார். எனவே மீரா தன்னை முறைப்படி விவகாரத்து செய்யாமல் வேறொருவரை திருமணம் செய்யக்கூடாது என்று வழக்கு தொடர்ந்தார். அதில் அவருக்கும் மீராவிற்கு திருமணம் நடந்துதற்கான திருமண சான்றிதழ் ஒன்றையும் ரெஹ்மான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனுடன் நடிகை மீரா தனது மனைவிதான் என்பதை நிரூபிக்க அவரின் கன்னித்தன்மையைப் பரிசோதிக்க வேண்டும் என்று தெரிவிருந்தார். 

ரெஹ்மானின் இந்த குற்றசாட்டினால் மீராவிற்கு திருமணம் நடந்து இருக்குமோ என்று அவரின் ரசிகர்கள் பேச ஆரம்பித்தனர். இதனால் முன்னணி நடிகையாக திகழ்ந்த மீராவிற்கு படவாய்ப்புகள் குறைந்தன. இதை சற்றும் விரும்பாத அவர், ரெஹ்மான் தொடர்ந்த வழக்கிற்கு எதிராக 2010ஆம் ஆண்டு மனுதாக்கல் செய்தார். ரெஹ்மானின் குற்றசாட்டுகள் அனைத்தையும் மறுத்த மீரா, தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறினார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் குடும்பநல நீதிமன்றம் சம்பந்தப்பட்ட பெண்ணின் அனுமதி இல்லாமல் கன்னித்தன்மை தொடர்பான சோதனையை செய்ய முடியாது என்று தெரிவித்தது. மேலும் நீதிமன்ற சட்டம் 1964ன்-படி மீரா வேறொருவருடன் திருமணம் செய்துக் கொள்வதற்கு எந்த தடையும் இல்லை என்று ரெஹ்மான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

பாகிஸ்தான் சட்டப்படி பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்சாட்டுகளின் போது மட்டுமே பாதிக்கப்பட்ட பெண்ணின் கன்னித்தன்மை குறித்த சோதனை நடத்தலாம். ஆனால் மீராவின் வழக்கில் அத்தகைய சோதனை நடத்த முடியாது எனவும், இது போன்ற சோதனைகளுக்கு பெண்ணின் சம்மதம் அவசியம் எனவும் அதனால் ரெஹ்மானின் மனுவை கோர்ட் தள்ளுபடி செய்ததாகவும் மீராவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.40 வயதாகும் மீரா தனக்கு திருமணம் ஆகவில்லை என்பதை ரசிகர்களுக்கு நிரூபித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.     
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close