[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

ஷூட்டிங்கில் விபத்து: நடிகை கங்கனா மீண்டும் காயம்

kangana-ranaut-injured-while-filming-manikarnika

ஷூட்டிங்கில் நடந்த விபத்தில் நடிகை கங்கனா ரனவ்த் காயமடைந்தார்.

நடிகை கங்கனா, இப்போது ’மனிகர்னிகா: தி குயின் ஆஃப் ஜான்சி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜான்சி ராணியின் வாழ்க்கை கதையான இதில் அவருக்கு ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம் உள்ளன. கிரிஷ் இயக்கும் இந்தப் படத்துக்கு கங்கனா இணை தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜோத்பூர் அருகே நேற்று நடந்தது. அங்குள்ள கோட்டை ஒன்றில் 40 அடி உயரத்தில் இருந்து அவர் குதிப்பது போல காட்சி படமாக்கப்பட்டது. 
இதற்காக கயிறு கட்டி அவர் குதித்தார். ஆனால் சரியான இடத்தில் அவர் குதிக்காததால், அவர் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்தார். இதையடுத்து படப்பிடிப்புக் குழுவினர் அவரை ஜோத்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் சென்றனர். அவர் காலில் எஸ்ரே எடுக்கப்பட்டது. எலும்பு முறைவு ஏதும் இல்லை என்பது தெரிய வந்தது. பின்னர் காலில் கட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் ஒரு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியதால், மும்பை திரும்பினார்.

இதே படத்துக்காக, கடந்த ஜூலை மாதம் ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் அவர் தலையில் பலத்த காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close