'தானா சேர்ந்த கூட்டம்' டீஸர் நவம்பர் 30 வெளியீடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா- கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின், 'நானாதான வீணா போன', 'சொடக்கு மேல சொடக்கு போடுது' போன்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் டீஸர் எப்போது வெளியிடப்படும் என்பது இன்று மாலை அறிவிக்கப்படும் என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் இந்த மாதம் 30 அன்று டீஸர் வெளியாகும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இப்படத்தை வரும் பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
திரைப்பட பாணியில் ஆசையைத் தூண்டி நூதன மோசடி ! ஓட்டல் உரிமையாளர் கைது
திருமண நாளை கொண்டாடுவதற்கு முன்பாக வீர மரணமடைந்த ராணுவ மேஜர்
எரிக்சன் நிறுவன வழக்கு ! அனில் அம்பானி குற்றவாளி: உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது !
''புல்வாமா தாக்குதலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன'' அமைச்சர் ரத்தோர் திட்டவட்டம்