[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுச்சேரியில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்
  • BREAKING-NEWS காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அக்.2இல் சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு
  • BREAKING-NEWS எம்எல்ஏ கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்தது எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆதார் அடையாள அட்டை செல்லும் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது

அண்ணாதுரை வெற்றியடைந்தால் வருமான வரி சோதனையும் வரும்: உதயநிதி ஸ்டாலின்

udhayanidhi-stalin-speech-at-annadurai-audio-launch

அண்ணாதுரை படம் வெற்றியடைந்தால் வருமான வரி சோதனையும் வரும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

'எமன்' படத்தைத் தொடர்ந்து 'அண்ணாதுரை' மற்றும் 'காளி' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வந்தார் விஜய் ஆண்டனி. இதில் 'அண்ணாதுரை' படத்தின் பணிகள் முழுமையாக முடிவுற்று நவம்பர் 30-ம் தேதி வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதன் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "அண்ணாதுரை படம் வெளிவரும் நேரத்தில் இந்த தலைப்பின் காரணமாக கண்டிப்பாக சர்ச்சை வரும் என நம்புகிறேன்.  படம் வெற்றியடைந்தால் நிச்சயம் வருமான வரி சோதனையும் வரும்" என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சரத்குமார், ஒருமுறை தணிக்கை செய்து சான்றிதழ் பெற்ற திரைப்படத்தை மீண்டும் தணிக்கை செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது என தெரிவித்தார்.

'அண்ணாதுரை' படத்தில் விஜய் ஆண்டனி, டயானா சம்பிகா, மஹிமா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ள இப்படத்தை விஜய் ஆண்டனி மற்றும் ராதிகா சரத்குமார் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close